#chithiraitv #சமூக செயற்பாட்டாளர் ஆசிரியை சபரிமாலா கரூர் அருகே அதிரடி பேட்டி |

  • 2 years ago
சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவு இட வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவியின் தாயிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் சபரி மாலா பேட்டி.

கரூர் மாநகராட்சி வெங்கமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று தனியார் பள்ளி மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை இன்று பெற்றுக் கொண்ட உறவினர்கள் பாலம்மாள் புரம் மின் மயானத்தில் தகனம் செய்து விட்டனர். இந்நிலையில் சமூக செயற்பாட்டாளர் சபரி மாலா உயிரிழந்த மாணவியின் வீட்டிற்கு வருகை தந்து மாணவியின் தாய் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபரி மாலா, பள்ளியில் பாலியல் தொடர்பாக மாணவிகள் தற்கொலை என்பது தொடர் கதையாக உள்ளது. கோவையை தொடர்ந்து தற்போது கரூரில் அரங்கேறியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் புகார் அளிக்கச் சென்ற போது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை காவல் நிலையத்தில் காத்திருக்க வைத்துள்ளனர். உடன் சென்ற அவரது உறவினர்களை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணதாசன் தாக்கியுள்ளார். யார் இந்த அதிகாரம் கொடுத்தது. மாணவியின் தற்கொலை வழக்கு திசை திருப்பப் படுகிறது. உள்ளூர் போலீசாரின் விசாரணையின் மீது நம்பிக்கை இல்லை. வழக்கை சி.பி.சி ஐ டிக்கு மாற்ற வேண்டும் என்றார். மாணவியின் 12ம் வகுப்பில் chemistry வகுப்பு எடுக்கும் ஆசிரியர் பிராந்த் தான் மாணவியின் தற்கொலைக்கு காரணம் என சொல்லப்பட்டும், அதை விசாரித்த போலீசார் அப்பள்ளியில் அந்த பெயரில் ஆசிரியர் இல்லை, கார்த்திகேயன் என்பவர் தான் அந்த வகுப்பை எடுக்கிறார் என்கிறார்கள். அவருடன் இன்னும் 5,6 பேர் இருக்கிறார்கள் என்றார். பள்ளிக் கல்வித் துறை இனிமேலும் தாமதிக்காமல் தனியார் பள்ளிகளை அரசுடமை ஆக்க வேண்டுன், தப்பு செய்யும் இது போன்ற ஆசிரியர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்றார்.

Recommended