#chithiraitv #தமிழக முதல்வரை கம்யூனிஸ்ட் கட்சிகள் தவறாக வழி நடத்துவதாக அர்ஜூன் சம்பத் அதிரடி பேட்டி

  • 2 years ago
தமிழக முதல்வரை கம்யூனிஸ்ட் கட்சிகள் தவறாக வழி நடத்துவதாக இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் ஈரோட்டில் பேட்டி ..

மத்திய அரசு வேளாண் சட்டத்தை ரத்து செய்த திரும்ப பெற்று வேளாண் சட்டத்தை அமுல்படுத்தக்கோரியும் , தமிழகம் முழுவதும் கள் இறங்குவதற்கு உண்டான தடையை நீக்கக்கோரியும் ஈரோட்டில் இந்து மக்கள் கட்சி சார்பில் வீரப்பன்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜூன் சம்பத் , வேளாண் சட்டத்தை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம் பாரதி பிறந்த நாளான இன்று தொடங்கப்படுகிறது என்றார்.7 பேர் விடுதலையில் தமிழக அரசு ஆளுநர் மீது பழி போடாமல் தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் , தமிழக அரசு சட்டமன்றத்தை கூட்டி பெட்ரோல் , டீசல் வரியை GST க்குள் கொண்டு வர தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற அர்ஜூன் சம்பத் , தமிழக முதல்வரை கம்யூனிஸ்ட் கட்சிகள் தவறாக வழி நடத்துவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் கள் இயக்கம் ஜனவரி 21 ம் தேதி அறிவித்த கள் இறக்கும் மோராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்து மக்கள் கட்சியும் கள் இறக்கும் என்றும் , தமிழகத்தில் கள்ளுக்கு தடை என்றால் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்றும் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்..

பேட்டி : அர்ஜூன் சம்பத் - தலைவர் , இந்து மக்கள் கட்சி

Recommended