#chithiraitv #தமிழக முதல்வரை புகழ்ந்து தள்ளிய அமைச்சர் என்ன சொன்னார் தெரியுமா ?

  • 2 years ago
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்திற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையேற்று பேசும் போது தெரிவித்தாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழக மக்களின் நலனுக்காகவும் நித்தம் நித்தம் பல்வேறு திட்டங்களை நாள்தோறும் நிறைவேற்றி தந்துகொண்டிருக்கின்றார்கள். வேளாண்மை துறையில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை தமிழக வரலாற்றில் முதன்முறையாக விவசாயத்திற்கென தனி நிதிநிலை அறிக்கையினை அறிவித்த முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர். மேலும், வேளாண் துறை வளர்ச்சிக்காகப் புதிதாக 'கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளான் வளர்ச்சி திட்டத்தை' அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் இருக்கும் விவசாயிகளுக்கு இத்துறை சார்ந்த அனைத்து திட்டங்களும் ஒரே இடத்தில் பெறவும், இதன் மூலம் அனைத்து தரப்பு சேவைகளையும் விவசாயிகள் ஒரே இடத்தில் பெற்று பயன்பெறவும் முடியும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளான் வளர்ச்சி திட்டத்தின் கீழ், வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிக துறை, வருவாய் மற்றும் பேரிடர் துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, பால் வள துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மீன் வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, நீர்வள ஆதார துறை, எரி சக்தி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் அளிப்பதே இந்த திட்டத்தின் முக்கியமான நோக்கம். இந்த திட்டம் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் போல இருக்கும் மிகப்பெரிய அளவில் தமிழ்நாடு முழுவதும் 2500 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும். மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் கிராமங்கள் ஒட்டுமொத்தமாக வளர்ச்சி அடைந்து, தன்னிறைவு அடையும். அதன்படி தருமபுரி மாவட்டத்தில் 56 ஊராட்சிகளில் முதற்கட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு வகுத்து, செயல்படுத்தி வருகின்றது. அதன் தொடர்ச்சியாக, மானாவாரி நிலத் தொகுப்புகளில் பயன்தரும் மரக்கன்றுகளை வளர்க்கும் முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், ஆண்டு முழுவதும் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானமும், வேலைவாய்ப்பும் கிடைக்கும் நோக்கத்துடன், “தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்" என்ற புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டத்தினை முதலமைச்சர் நேற்றைய தினம் தொடங்கி வைத்தார் என்றார்

Recommended