#chithiraitv #செந்தில்பாலாஜியே குற்றத்தினை ஒப்புக்கொண்டார் - பாஜக அண்ணாமலை அதிரடி பேட்டி |

  • 2 years ago
அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை இல்லத்திருமண விழா சேலத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது., செந்தில்பாலாஜி அவருடைய உதவியாளர் மற்றும் ஆட்களே வேலைக்கு பணம் வாங்கியதாக உயர்நீதிமன்றத்திலேயே அப்பீல் செய்து, நீதியை கொலை செய்து அவர்களே ஒத்துக்கொண்டுள்ளனர். பணத்தினை திருப்பி கொடுப்பதில் குற்றமில்லை என்று கூறி திருப்பி அந்த பணத்தினை கொடுத்துள்ளனர். மேலும், வெள்ள பாதிப்பு விவகாரத்தில் இருந்து மக்களை திசை திருப்பவே தமிழ்ப் புத்தாண்டு தேதியை திமுக அரசு கையில் எடுத்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை திமுக அரசு முறையாக செயல்படுத்தாமல் தன்மீது உள்ள தவறை மறைக்க கடந்த அதிமுக அரசு மீது குறை சொல்லக் கூடாது என்றார். உரிய ஆதாரம் இன்றி கடந்த ஆட்சியில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அமைச்சர்கள் கூறுவதை ஏற்க முடியாது என்று கூறிய அண்ணாமலை, தொடர்புடைய அரசு அதிகாரிகள் விசாரணை செய்து தெரிவித்தால்தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றார். தமிழகத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரைடுகள் நடத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையை குறைக்க மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் விலையை கொண்டு வந்தால் நிச்சயம் ஒரு லிட்டர் பெட்ரோல் 60 ரூபாய்க்கு கீழ் வந்துவிடும் என்றும் கூறினார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம் செய்யும்போது அதிகளவில் போலீஸ் பாதுகாப்பு போடுவதை தவிர்த்தாலே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கும் என்றும், அமைச்சர்களின் பாதுகாப்பு பணிக்காக மட்டுமே காவல்துறையை பயன்படுத்தக் கூடாது எனவும் கூறினார். வெள்ள பாதிப்பு விவகாரத்தில் மக்களை திசை திருப்புவதற்காகவே திமுக அரசு தற்போது தமிழ் புத்தாண்டு தேதியை கையில் எடுத்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

Recommended