#chithiraitv #ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை தொடர்பாக பாமக செய்தி தொடர்பாளர் பாலு அதிரடி பேட்டி |

  • 2 years ago
பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றதில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்

ஜெய் பீம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வன்னியர்களுக்கு எதிரான காட்சிகள் அனைத்தையும் நீக்க வேண்டும் எனவும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டியும் மேலும் வன்னியர் சமுதாயத்தை இழிவு படுத்தியதற்காக ரூபாய் 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நடிகர் சூர்யாவிற்கு வன்னியர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்களது பதிலை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறோம்
இந்த திரைப்படத்தால் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளனர். நீதிமன்ற வழக்கில் வரக்கூடிய இழப்பீட்டு தொகை முழுவதையும் இந்த பிரச்சினையில் உண்மையில் பாதிக்கப்பட்ட பார்வதி அவருடைய குடும்பத்தினர் வாரிசுகளுக்கு வழங்கப்படும். வன்னியர் சங்கத்தின் உணர்வுகளை சூர்யா மற்றும் திரைப்பட இயக்குனர்கள் புரிந்துகொள்ளவில்லை எனவும், மேலும் சூர்யா தரப்பில் இருந்து அவர்களது பதிலை பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தார்.

பேட்டி; வழக்கறிஞர் பாலு பாமக செய்தி தொடர்பாளர்

#ஜெய்பீம் #jaibhim #todaytrendingnews #todaycinenmanews #political #newzbuz #cinibuz #firstnews_tamil #dotcom_tamil #chithiraitv #chithiraispecial #boonews #boominews #boonewsnetwork #anmnews24

Recommended