#BOOMINEWS | கரூரில் தூர்வாரும் பணி கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அதிரடி ஆய்வு |

  • 3 years ago
கரூர் நகராட்சிக்குட்பட்ட சின்னஆண்டாங்கோவில் இரட்டை வாய்க்கால், திண்ணப்பா திரையரங்கம் அருகில் உள்ள திட்ட சாலை கழிவுநீர் வாய்க்கால்கள், வேலுசாமிபுரம் ராஜவாய்க்கால் உள்ளிட்ட நீர்வழித்தடங்களில், தூர்வாரும் பணிகளை கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு செய்தார். அப்போது, அவர் கூறியதாவது: மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்வழித்தடங்களை தூர்வாருதல், நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாலங்களின் அடியில், மழைநீர் தேங்கி நிற்காமல் வழிந்தோடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. மேலும், தூர்வாரப்படும் இடத்தின் தன்மைக்கு ஏற்ப பொக்லைன் இயந்திரங்கள் மூலமாகவும், பணியாளர்களைக் கொண்டும் தூர்வாரப்படுகிறது. கழிவுநீர் வாய்க்கால்களில், தூர்வாரி எடுக்கப்பட்ட கழிவுகளை, அருகில் உள்ள குப்பை கிடங்கிற்கு எடுத்துச்சென்று அப்புறப்படுத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். நகர்நல அலுவலர் லட்சியவர்ணா, தாசில்தார் சக்திவேல், உதவி பொறியாளர்கள் கார்த்திக், தங்கவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.* தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில், மாநிலம் முழுவதும் கால்வாய்கள், மழை நீர் வடிகால்கள் தூர் வாரும் பணிகள் கடந்த, 20ல் தொடங்கி வரும், 25 வரை நடக்கிறது. கரூர் மாவட்டத்திலும், இந்த பணிகள் நடந்து வருகின்றன. நேற்று காலை, கரூர் - ஈரோடு சாலை காயத்திரி நகரில் கால்வாய்கள் தூர் வாரும் பணி நடந்தது. அப்போது, நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் சத்தியபாமா, உதவி பொறியாளர் கர்ணன் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்

Recommended