#BOOMINEWS | இவர்களும் மனிதர்கள் தான் நிருபித்த கரூர்-ஈரோடு அறக்கட்டளை அமைப்பினர் மக்கள் பாராட்டு |

  • 3 years ago
சுதந்திர தினத்தினை முன்னிட்டு கரூரில் தன்னார்வலர்கள் சிலர் ஆதரவற்றோர் சாலையோரத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு தலைமுடி வெட்டியும், முகச்சவரம் செய்து குளிக்க வைத்து புத்தாடை அணிவித்து மகிழ்ந்தனர்

நம் நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூரில் நகரில் தேர்வீதியில் சாலையோரத்தில் ஆதரவற்ற நிலையில் வசித்து வரும் முதியவரை கண்ட ஈரோட்டை சார்ந்த தனியார் (தாய்மை) அறக்கட்டளை, கரூரை சார்ந்த தனியார் (சங்கமம்) அறக்கட்டளையை சார்ந்த தன்னார்வலர்கள் அவரிடம் பேச்சு கொடுத்து அவரிடம் நட்பு ஏற்படுத்தினர். பின்பு அவருக்கு தலைமுடியை மொட்டை அடித்தும், முகச் சவரம் செய்தனர். பின்பு, அவர்கள் எடுத்து வந்த தண்ணீரை கொண்டு சேம்பு, சோப்பு போட்டு குளிக்க வைத்தனர். பின்பு, அவர்கள் எடுத்து வந்த புதிய கைலிகளை கட்டி விட்டும், மேல்சட்டை மற்றும் துண்டு அணிவித்தும், புது மனிதனாக்கி அருகில் அமர வைத்தனர். அவர் தனக்கு தேநீர் வேண்டும் என கேட்டதை அடுத்து அவருக்கு தேநீர் வாங்கி கொடுத்து மகிழ்ந்தனர். பின்பு, இதே போன்று வடக்கு பிரதட்சணம் சாலை, கரூர் பேருந்து நிலையம், தொழில்பேட்டை பகுதியில் உள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கு தூய்மைபடுத்தச் சென்று அங்கும் இதே பணியினை துவங்கினர். இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் இந்த செயல் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் பலர் இந்த செயல்களை மிகவும் பெரிதாக பாராட்டினர்.

Recommended