#BOOMINEWS | தீப்பெட்டி தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்வது குறித்த கருந்தரங்கம்

  • 3 years ago
சாத்தூர் அருகே ஆர்.ஆர்.நகரில் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்வது குறித்த கருந்தரங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது ....

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஆர்.ஆர். நகரில் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் தலைமையில் நடைபெற்றது. கடந்த 1948ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஊதிய சட்டம் பிரிவின்படி தீப்பெட்டி தயாரிப்பு தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பது குறித்து
தமிழக அரசு ஆலோசனை குழுக்களை அமைத்தது. இதனையடுத்து மதுரை மண்டல தொழிலாளர்கள் இணைஆணையர் மற்றும் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர்குழு பல்வேறு நாட்களில் பல கட்டங்களாக கூட்டங்கள் அமைத்தும், தொழிலாளர்களிடம் நேரிடையாக சென்று களப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து இன்று சாத்தூர் அருகே ஆர்.ஆர். நகரில் தனியார் சிமென்ட் ஆலை உள்ள கூட்டஅரங்கில் வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கருத்தரங்க கூட்டத்தில் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள், குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் செய்வது தொடர்பான தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகளிடம் இருந்து கருத்து மனுக்களை நேரடியாக பெறப்பட்டது. பின்பு மதுரை மண்டல தொழிலாளர்கள் இணைஆணையர் குழுக்கள் தம்மநாயக்கண்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைக்கு நேரடியாக சென்று தீப்பெட்டி உற்பத்தி செய்யும் தொழிலாளர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் குறித்து தற்போது வாங்கும் ஊதியம் குறித்தும், நிரந்தர ஊதியம் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தற்போது உள்ள விலைவாசி ஏற்றத்தால் தாங்கள் தற்போது வாரத்திற்கு குறைந்த வட்சமாக ஒரு நபர் 500 ரூபாய் வாங்குவதாகவும், இந்த ஊதியத்தை வைத்து தங்களால் குடும்பத்தை நடத்த முடியவில்லை என்றும், வாரத்திற்கு 3000 ரூபாய் வரை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். எனவே தமிழக அரசாங்கம் தங்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக மாதம் 12000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வேண்டும் என கேட்டு கொண்டதாக மதுரைமண்டல இனணஆணையர் சுப்பிரமணி தெரிவித்தார். மேலும் தீப்பெட்டி உற்பத்தி தொழிலார்களின்கோரிக்கையையடுத்து தமிழகஅரசுக்கு பரிந்துரைக்கப்படும் என தெரிவித்தார்.

பேட்டி: சுப்பிரமணி- மதுரை மண்டல தொழிலாளர் இணை ஆணையர்.

Recommended