#BOOMINEWS | கரூரில் விடாமல் துரத்திய லஞ்ச ஒழிப்பு போலீஸார் மாவட்ட பதிவாளர் & டிரைவர் மீது வழக்குப்பதிவு |
  • 3 years ago
லஞ்சப் பணத்துடன் காரில் எஸ்கேப் ஆன மாவட்ட பதிவாளரை விடாமல் துரத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப் பிடிப்பு விடிய விடிய விசாரணை – விசாரணைக்கு பின்னர் வழக்கு பதிவு

கரூர் அடுத்த தாந்தோன்றிமலை பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் பின்புறம் மாவட்ட பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் நிர்வாக மாவட்ட பதிவாளராக இருப்பவர் பாஸ்கரன். இவர் நேற்று பணியின் போது பெற்ற லஞ்ச தொகையை எடுத்துக் கொண்டு அவர் காரில் வீடு திரும்பிக் கொண்டிருப்பதாக கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கரூர் டூ திருச்சி நெடுஞ்சாலையில் உப்பிடமங்கலம் சாலையில் காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாவட்ட பதிவாளரின் காரை நிறுத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு கவரில் COVER போட்டு வைக்கப்பட்ட நிலையில் சுமார் ரூ 50 ஆயிரம் ரொக்கம் இருப்பது கண்டிபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார், மாவட்ட பதிவாளர் பாஸ்கரனையும், அவரது ஓட்டுநர் சந்திரசேகரன் ஆகியோரை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பாஸ்கரன் சுமார் ரூ 50 ஆயிரம் ரூபாய்க்கான கணக்கு எதையும் காண்பிக்காததால் அவர் மீதும், அவரது ஓட்டுநர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு பின்பு அவர்களை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் கரூர் மாவட்ட பத்திர பதிவுத் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் நடவடிக்கை கரூர் மாவட்ட்த்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் நடத்த வேண்டுமென்ற கோரிக்கை மக்களிடையே எழுந்துள்ளது.
Recommended