ஒரு ஏக்கரில் 1,300 நெல் ரகங்கள்... பாரம்பர்ய நெல்களை மீட்கும் விவசாயி!
  • 4 years ago
“இத பாருங்க ராஜமுடி மைசூர் மகாராஜா சாப்பிட்ட அரிசி ரகம், இத பாருங்க பர்மா பிளாக் புற்றுநோய் எதிர்ப்பாற்றல் கொண்ட ரகம், இந்தியாவின் சிறிய நெல் ரகம் சுகந்தினி, பிளாக் ஜாஸ்மின் தாய்லாந்து ரகம் உலகளவில் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் ரகம், காலா நோனி அஸ்ஸாம் மாநில வாசனை ரகம், சேலம் சென்னா சாப்பிடுறதுக்கு ஏற்ற ரகம்” என்று 1,300 நெல் ரகங்களை ஒரே இடத்தில் சாகுபடி செய்து ஒவ்வொன்றைப் பற்றியும் ஆச்சர்யத்தோடு விளக்கி, ஒரு நெல் அருங்காட்சியகத்துக்குள் சென்ற வந்த உணர்வை ஏற்படுத்தினார் சையது கனி கான். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சையது கனி கான் தேசிய அளவில் நடைபெறும் இயற்கை விவசாயக் கண்காட்சிகள், பாரம்பர்ய நெல் திருவிழாக்கள், விதைத் திருவிழாக்கள் என பல இடங்களில் விதைகளைக் காட்சிக்கு வைப்பதும், அதுசம்பந்தமான தகவல்களை விவசாயிகளுக்கு விளக்குவதும், விதைகளைக் கொடுத்து பரவலாக்குவதுமாகச் செயல்பட்டு வருகிறார். மாநில விருதுகள், தேசிய விருதுகள் பெற்றிருக்கும் இவருடைய பண்ணை மண்டியா மாவட்டம் கிரகவலு என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த ஊர் பெங்களூருவிலிருந்து 120 கிலோ மீட்டர், மண்டியாவிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

Executive Producer: T.Jayakumar
Video: V.Sathishkumar
Editing: Arun

தொடர்புக்கு,
சையது கனி கான்,
கிரகவலு கிராமம்,
மாளவள்ளி தாலுக்கா,
மண்டியா மாவட்டம்,
கர்நாடக மாநிலம்
செல்போன்: 78926 92713, 99017 13351,
Recommended