#chithiraitv #அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அரசியல் தான் முக்கியம் வாக்களித்த நாங்கள் முக்கியமல்ல ?

  • 2 years ago
இங்குள்ள அமைச்சருக்கு அரசியல் தான் முக்கியம் நாங்கள் வாக்களித்து எம்.எல்.ஏ மந்திரி ஆக்கினோம், ஆனால் நான்கு தினங்களாகியும் அந்த உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு ஆறுதல் சொல்ல கூட செல்ல வில்லை – மாணவர் அமைப்பு அதிரடி குற்றச்சாட்டு

கரூர் அருகே வெண்ணைமலை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் கரூர் அரசு காலனி பகுதியை சேர்ந்த மாணவி படித்து வருகிறார். மாணவி கடந்த 19 ஆம் தேதி அன்று பள்ளிக்கு சென்று வீடுக்கு வந்த நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்,இந்த நிலையில் புகார் அளிக்கச் சென்ற பெற்றோர்களைதகாத வார்த்தையில் திட்டி இரவு வரை காவல் காக்க வைத்த காவல் ஆய்வாளர் கண்ணதாசனை பணியிடை நீக்கம் செய்ய இருந்த நிலையில், மாணவியின் இறப்பதற்கு முன்பு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார் அந்த கடிதத்தில் பாலியல் குற்றங்களில் கடைசியாக இருக்கட்டும்,யார் என்று சொல்வதற்கு பயமாக உள்ளது என ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து கரூர் சைபர் கிரைம் டிஎஸ்பி கீதாஞ்சலி தலைமையில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவியின் செல்போன் கைப்பற்றி பல கோணத்தில் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று வரை தொடர்ந்து விசாரணை ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பு மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஒன்று சேர்ந்து கருப்பு உடை அணிந்து பேருந்து நிலையம் அருகே மாணவியின் பெற்றோரை தகாத வார்த்தையில் திட்டிய காவல் ஆய்வாளர் கண்ணதாசனே கைது செய்ய வேண்டும் எனவும் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசே மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அதிமுக, பாஜக, பா.ம.க, நாம் தமிழர் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அந்த உயிரிழந்த மாணவியின் வீட்டிற்கு சென்று அவரது தயாருக்கு ஆறுதல் கூறியதுடன், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சரி, உடனடியாக அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டுமென்றும், காவல்துறை இதில் பாரபட்சம் காட்ட கூடாது என்றும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிலையில், கரூர் பேருந்து நிலையத்தின் அருகே நடைபெற்ற இந்த மாணவர்களின் போராட்டத்தின் போது, நாங்கள் எல்லாம் ஒட்டு போட்டு ஒருவரை எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுத்தோம், அவர் அமைச்சராக ஆகி, கோவையில் அரசியல் வளர்க்க கிளம்பி விட்டோம் என்றும், வாக்களித்த எங்கள் வீடு எலவு விழுந்த வீடாக உள்ளது என்றும் அந்த மாணவர்கள் குற்றம் சாட்டினார். இந்நிலையில், இந்த சம்பவமறிந்த தமிழக மின்சாரத்துறை அமைச்சரும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி, இன்று இரவு சுமார் 8 மணிக்கு மேல் அந்த மாணவியின் பெற்றோரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார்.

Recommended