10 நாட்களில் 11 அடியை எட்டிய வைகை அணை - வீடியோ

  • 4 years ago
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்குகிறது. 71 அடி உயரமுள்ள வைகை அணைக்கு கடந்த 1ஆம் தேதி நீர் வரத்து இன்றி 30 அடியாக காணப்பட்டது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழையின் காரணமாக தேக்கடி முல்லைப் பெரியாறு அணை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு மழை பெய்து வருவதன் காரணமாகவும் முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் ஆனது 136.75அடியை எட்டியது இதனை அடுத்து முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 2130 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதன் விளைவாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணைக்கு நீர் வர துவங்கியதையடுத்து தற்போது அணையின் நீர்மட்டமானது 40.98 அடியாக உள்ளது. வைகை அணைக்கு வினாடிக்கு 1946 கன அடி வீதம் நீர் வரத்து வருகிறது.72 கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றபட்டு வருகிறது அதுமட்டுமின்றி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதும் அணைக்கு நீர் வரத்திற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. கடந்த 10 நாட்களில் வைகை அணையின் நீர்மட்டம் சுமார் 11 அடிக்கு மேல் உயர்ந்துள்ளதையடுத்து ஐந்து மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Vaigai dam water level has been increased 10 ft in just 10 days

Recommended