எட்டு வழி சாலைக்கு தொடர் எதிர்ப்பு-வீடியோ

  • 5 years ago
எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் இரண்டாவது முறையாக ஆட்சேபனை மனு அளிக்க ஏராளமான விவசாயிகள் மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்திற்கு திரண்டனர் .

சேலம் சென்னை இடையே எட்டு வழி சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டது. விவசாயத்தை அழித்து சாலை அமைக்க ஐந்து மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடயே எட்டு வழி சாலைக்கு தடைவிதிக்க கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கி, இத்திட்டத்திற்கு இடைகால தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனிடயே எட்டு வழி சாலை திட்டம் ஆறு வழி சாலையாக மாற்றிஅமைக்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. சாலை அமைக்க விளைநிலங்களை வழங்க மறுப்பு தெரிவித்து சேலத்தை சேர்ந்த விவசாயிகள் இரண்டாவது முறையாக ஆட்சேபனை மனு அளிக்க சேலம் மாவட்ட ஆட்சிதைவர் அலுவலத்தில் குவிந்தனர். முன்னதாக புதிய சாலை திட்டத்திற்கு எதிப்பு தெரிவித்து பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்து பேரணியாக செல்ல முயன்றனர். செல்ல முறையாக அனுமதி பெறாத காரணத்தினால் பேரணியாக செல்ல காவல் துறை மறுப்பு தெரிவித்தது. விவசாயுகளை ஒன்று திரள அனுமதிக்காத காவலர்களை கண்டித்து சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்தையடுத்து விவசாயிகள் அமைதி பேரணி செல்ல காவல் துறையினர் அனுமதி வழங்கினர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்தில் மத்திய மாநில அரசுகளின் புதிய சாலை திட்டத்திற்கு நிலம் வழங்க மறுப்பு தெரிவித்து அலுவலர்களிடம் ஆட்சிபனை மனுக்களை வழங்கினர்



DES: Continuous resistance to the eight-way road

Recommended