8 வழி சாலைக்கு ஜிகே வாசன் கண்டனம்- வீடியோ

  • 6 years ago
8 வழிச்சாலை குறித்து எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் இது தான் திட்டம் இப்படித்தான் நிறைவேற்றப்பட உள்ளது என்பது முட்டால் தனமான விஷயம் என்று ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்

சேலத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பல ஆயிரம் கோடி செலவில் அமைக்கும் பசுமை வழிசாலையால் பொதுமக்களுக்கு என்ன பயன் என்றும் மக்கள் மீது மாநில அரசு போர் தொடுத்து வருவது கண்டனத்துக்கு உரியது என்றார் . 8 வழி சாலை வேண்டும் என்று எந்த மக்கள்,எந்த அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தார்கள் என்றும் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அவைகள் மக்களின் வயிற்றில் அடிக்காமல் நிறைவேற்ற பட வேண்டும் என்று கூறினார். ஓட்டுபோட்டு ஜெயிக்க வைத்து ஆட்சியில் அமர வைத்த அதிமுக அரசு மக்களுக்கு செய்ய கூடிய பணி இதுவல்ல என்றதுடன் தமிழக அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் வகையில் இதுவரை அரசு நடந்துகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார் . மேலும் 8 வழிச்சாலை குறித்து எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் இது தான் திட்டம் இப்படித்தான் நிறைவேற்றுவோம் என்பது முட்டால் தனமானது என்று ஜிகே வாசன் கண்டனம் தெரிவித்தார்

Des: 8 This is the way the project is to be implemented without any advice on the pedestal.

Recommended