சாதிக்கும் சாத்துக்குடி சாகுபடி
  • 6 years ago
அரியலூர் மாவட்டத்தில் பெரும்பாலும் மானவாரி பயிர்களே சாகுபடி செய்யப்படுகின்றது. கிணறு பாசன வசதி உள்ள விவசாயிகள் கரும்பு, கடலை, நெல் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்கின்றனர். மாற்று பயிர் சாகுபடி செய்ய வழி இல்லாததால் சாகுபடி செய்த பயிர்களையே தொடர்ந்து சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் கீழவண்ணம் கிராமத்தில் உள்ள சீனிவாசன் என்ற விவசாயி சாத்துக்குடி சாகுபடி செய்து சாதித்து வருகின்றார்.

பல்வேறு சத்துக்கள் கொண்டுள்ள சாத்துக்குடி குளிர்ச்சியான பகுதிகளிலேயே அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றது. வறட்சியான பகுதிகளில் சாகுபடி செய்ய விவசாயிகள் தயங்கிய நிலையில் மிகவும் வறட்சியான அரியலூர் மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் 2 சாத்துக்குடி கன்றுகளை நட்டு பரிசோதனை மேற்கொண்டார் சீனிவாசன். 2வருடத்தில் மரங்கள் காய்க்க தொடங்கியதனால் நம்பிக்கை கொண்ட சீனிவாசன் தனது ஒரு ஏக்கர் நிலத்தில் சாத்துக்குடி கன்றுகளை நட திட்டமிட்டார். இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பண்ணையில் சாத்துக்குடி கன்றுகளை வாங்கி வந்து நட்டார். அந்த செடிகளுக்கு தற்போது இரண்டரை வயதாகிறது. 3வருடத்திற்கு பிறகுதான் காய்ப்பிற்கு விட வேண்டும் என்பதால் 20 மரங்களில் மட்டும் காய்ப்பிற்கு விட்டுள்ளார். தற்போது ஒரு மரத்திற்கு 60 முதல் 80கிலோ வரை மகசூல் கிடைக்கிறது. கிலோ ஒன்று சராசரியாக 30ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

இது குறித்து விவசாயி சீனிவாசன் கூறும் போது தனது ஒரு ஏக்கர் நிலத்தில் சாத்துக்குடி சாகுபடி செய்துள்ளேன். வியபாரிகள் வயலுக்கே வந்து பழங்களை கொள்முதல் செய்துக் கொள்வதால் விற்பனையிலும் எந்தவித பிரச்சனையும் இல்லை அதோடு சாகுபடி செலவு குறைவாக உள்ளதால் அதிகளவில் லாபம் கிடைப்பதாக கூறுகின்றார். சாகுபடி செய்த பயிர்களையே தொடர்ந்து சாகுபடி செய்யாமல் மாற்று பயிராக பழ மரங்கள், பூ செடிகள் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்ய அரசு ஊக்கமளிக்க வேண்டும். விவசாயத்திற்கான அரசின் திட்டங்கள் அனைத்து விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறுகின்றார்.
¤WA8 3948 : சீனிவாசன் - விவசாயி

வேலையாட்கள் தட்டுப்ப?
Recommended