கிணற்று நீரை பயண்படுத்தி இரண்டாம் போக நெல் சாகுபடி பணி- வீடியோ

  • 5 years ago
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கினற்று நீரை பயண்படுத்தி இரண்டாம் போக நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம், வடுகபட்டி, மேல்மங்களம் உள்ளிட்ட பகுதியில் நெல் சாகுபடியை விவசாயிகள் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் இரண்டு போகம் நடவு செய்து வருகின்றனர். இந்த பகுதியில் ஒரு போகம் நெல் குளத்து நீரை பயண்படுத்தியும் இரண்டாம் போகம் கினற்று நீரை பயண்படுத்தியும் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் நடவு செய்து வந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள குளங்கள் அனைத்தும் முறையாக தூர்வார்ப்படாமல் உள்ளதால் மழை நீரை சேமித்து வைக்கப்படாத நிலையில் உள்ளது. எனவே அந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைததால் தற்பொழுது 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் நடவு செய்த பகுதியில் 200 ஏக்கராக குறைந்துள்ளது. கினற்று நீரை பயண்படுத்தி என்.எல்.ஆh; என்ற ரக நெல் நடவு செய்து வருகின்றனர். மேலும் கோடை மழை தொடர்ந்து பெய்து வருவதால் நடவு பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

des : Rice cultivation is done to rice and rice well

Recommended