தமிழக மக்களுக்கு பீதியை கிளப்பும் செல்லூர் ராஜூ!-வீடியோ

  • 6 years ago
அதிமுக அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உளறி கொட்டி உள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அணிகளாக சிதறிக் கிடந்த அதிமுக தினகரனையும், சசிகலாவையும் ஒதுக்கிவைத்ததற்கு பின்னர் ஒன்றிணைந்தது. இதனால் கட்சியின் பெயர், இரட்டை இலை சின்னம் ஆகியன ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்கே கிடைத்தன. இந்நிலையில் பொதுச் செயலாளராக உள்ள சசிகலாவை வெட்டி விடுவதற்காக அந்த பதவியே இனி அதிமுகவில் இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் அதிமுகவின் சட்டவிதிகளின்படி பொதுச் செயலாளர் பதவியே அதிகாரமிக்கது. எனவே இந்த பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே.சி. பழனிச்சாமி தேர்தல் ஆணையத்தில் வழக்கு பதிவு செய்தார். இதனிடையே ஆர்கே நகர் தேர்தல் தோல்வியால் தினகரன் ஆதரவாளர்களாக உள்ள 2000 பேர் நீக்கப்பட்டு விட்டனர்.
இதனால் தேர்தல் நடத்த ஏதுவாக ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணியினர் உறுப்பினர் சேர்க்கையை கடந்த ஜன. 29-ஆம் தேதி முதல் தொடங்கி வைத்தனர். இதையடுத்து ஆங்காங்கே அமைச்சர்கள் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

Minister Sellur Raju says that whoever has the ADMK membership, they only will get TN government's Welfare schemes.

Recommended