சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கலாய்த்த ஆர்.ஜே பாலாஜி- வீடியோ
  • 6 years ago
இது என்ன முதியோர் கிரிக்கெட்டா என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து கலாய்த்துள்ளார் ஆர்.ஜே. பாலாஜி. 2018ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் நேற்று துவங்கியது. இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் விளையாட உள்ளது. வழக்கம் போல சென்னை அணியில் தல டோணி உள்ளார்.

நேற்றைய ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எடுக்கப்பட்ட வீரர்களில் பெரும்பாலானவர்கள் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள். இந்நிலையில் இது குறித்து ஆர்.ஜே. பாலாஜி விமர்சித்துள்ளார்.

ஹர்பஜன் சிங், கரண் சர்மா, ராயுடு ஆகியோர் எதிரணியில் விளையாடினாலே செம்ம கலாய் கலாய்ப்பேன். இதில் நம்ம அணியில் எடுத்து வச்சிருக்காங்க என்று ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.

RJ Balaji has posted a video on twitter about the players taken for Chennai Super Kings. He is not happy as the players are above 30. He even talked about Harbhajan Singh's tweet in tamil for Pongal.

Recommended