ரஜினி, கமல்-எம்.ஜி.ஆர்-ஆக முடியாது-தம்பிதுரை- வீடியோ

  • 6 years ago
ரஜினி, கமல் என அரசியலுக்கு யார் வந்தாலும் எம்ஜிஆர் ஆக முடியாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேசிய கட்சிகளால் ஆட்சியமைக்க முடியாது, திராவிட கட்சிகள்தான் அரசமைக்கும் எனவும் தம்பிதுரை கூறியுள்ளா்.மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை, சமூகநீதிக்காகவே வந்தார் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சியை ஆரம்பிக்கலாம் என்றும் ஆனால் அவர்கள் அனைவரும் எம்ஜிஆர் ஆக முடியாது எனவும் கூறினார்.

சமூகநீதிக்காக எம்ஜிஆர் அரசியலுக்கு வந்ததாக தெரிவித்த தம்பிதுரை, தற்போது வருபவர்கள் அரசியலுக்கு எதற்காக வருகிறார்கள் எனத் தெரியவில்லை என்று கூறினார்.

மேலும், திராவிட இயக்கத்திற்கு முடிவு கிடையாது எனக் குறிப்பிட்ட அவர், தேசியக் கட்சிகள் நோட்டாவுடன் மட்டுமே போட்டிபோட முடியுமென விமர்சித்தார்.

thambidurai press meet

Recommended