ஹெலிக்காப்டரில் பறந்து ஒன்றாக சென்ற ரஜினி, கமல்- வீடியோ

  • 6 years ago
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக நடத்தப்படும் மாபெரும் நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடைபெற்று வருகிறது. நடிகர் சங்க கட்டிட நிதி திரட்டுவதற்காக நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்படும் இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்துகொள்கிறார்கள். இன்றும், நாளையும் கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் நடக்கின்றன.

நட்சத்திர கலைவிழாவில் கலந்து கொள்வதற்காக 300-க்கும் மேற்பட்ட திரை நட்சத்திரங்கள் மலேசியா சென்றுள்ளனர். நடிகர் ரஜினிகாந்தும் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளார். நேற்று முன்தினம் இரவே கிளம்பி மலேசியா சென்றுள்ளார் ரஜினிகாந்த். கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்து இன்று மலேசியா வந்துள்ளார்.

நேற்று கோலாலம்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நட்சத்திர விளையாட்டு வீரர்களின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. கிரிக்கெட் அணி வீரர்களின் அறிமுக நிகழ்ச்சியும், ஜெயம் ரவி - ஆர்யாவின் கால்பந்து அணியினரின் அறிமுக நிகழ்ச்சியும் நடந்தது

தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் ஆறு அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளைப் பார்ப்பதற்காக ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் மைதானத்திற்கு வந்துள்ளனர். கிரிக்கெட் விளையாடும் நடிகர்களுக்கு வாழ்த்துகளைக் கூறினர்.

மீபத்தில் அரசியலில் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் ஹெலிகாப்டரில் ஒன்றாக வந்து இறங்கினார்கள். அவர்களை விழாக் குழுவினர் வரவேற்று அழைத்துச் சென்றனர். இருவரையும் ஒன்றாகப் பார்த்த ரசிகர்கள், நட்சத்திரங்கள் கோஷம் எழுப்பி வரவேற்றனர்.


Star arts festival on behalf of the South Indian Artiste Association is taking place in Malaysia. Actors including Rajinikanth and Kamal Haasan, are participating in this festival. To watch cricket matches, Rajinikanth and Kamal Hassan came together on the helicopter.

Recommended