கோஹ்லி இன்னும் வளரனும் - கிரேம் ஸ்மித் சாடல்- வீடியோ

  • 6 years ago
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி ஒரு கேப்டனாக இன்னும் வளர வேண்டியுள்ளது என்று, தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் விளாசியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கருடன், டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்மித் அப்போது கூறிய கருத்துக்கள் கோஹ்லியை கடுமையாக சாடுவதாக இருந்தன. இந்தியாவின் நீண்டகால கேப்டன் தேர்வாக கோஹ்லி இருக்க முடியாது என்றே கருதுகிறேன் என்று வெளிப்படையாகவே தெரிவித்தார் ஸ்மித்.
கிரேம் ஸ்மித் கூறியதாவது: கோஹ்லி தன்னை சுற்றிலும் ஒரு ஒளிவட்டத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளார். சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் அவர் ஒரு முன்னணி வீரர் என்பதை மறுக்க முடியாது. ஆனால், தன்னைப்போலவே அணியையும் முழு திறமை கொண்டதாக மாற்ற வேண்டியது கேப்டன் பொறுப்பு. அணியில் கோஹ்லி அவரது விருப்பப்படி முடிவுகளை எடுத்து வருவதாகவே தெரிகிறது.

இந்திய அணிக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன என்பதை கோஹ்லிக்கு எடுத்துக்கூறும் வகையில் ஒரு பயிற்சியாளர் தேவை. கோஹ்லியிடம் சண்டை போட வேண்டும் என கூறவில்லை. அவருக்கு பக்குவமாக எடுத்துக் கூறி முன்னால் உள்ள வாய்ப்புகளை எடுத்துக்கூறும் நபர் தேவை. இதன் மூலம், கோஹ்லியை ஒரு சிறந்த கேப்டனாக மாற்ற முடியும்.

கோஹ்லி டெக்னிக்கலாக மிச்சிறந்த பேட்ஸ்மேன். தனது திறமையை அவர் நன்கு உணர்ந்துள்ளார். பிற வீரர்களுக்கும் அவரே தரத்தை நிர்ணயிக்கிறார். கேப்டன் செயல்பாடுகள் பிறருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கோஹ்லி செயல்பட வேண்டும்.

Recommended