குஜராத் வெற்றிக்கு பின்னால் இருக்கும் "மாஸ்டர் மைண்ட்"!- வீடியோ

  • 6 years ago
குஜராத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு பின்னால் பாஜக தேசிய பொதுச்செயலாளர் புபேந்திர யாதவ் இருப்பதாக அந்த கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். இவர் சில நாட்களுக்கு முன்பு பாஜக தலைவர் அமித் ஷாவால் குஜராத் மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.இவரின் கடின உழைப்பின் மூலமாகவே இவ்வளவு பெரிய வெற்றி சாத்தியம் ஆகி உள்ளதாக பாஜக கட்சியினர் தெரிவித்து இருக்கின்றனர். அரசியலில் இவரது வரலாற்றை வைத்தே அமித் ஷா மிக முக்கிய பதவியை இவருக்கு அளித்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஒருமதமாக இவர் மிகவும் கடினமாக உழைத்ததாவும், அமித் தேர்தல் சமயத்தில் எப்படி செயல்படுவாரோ அப்படியே இவர் செயல்பட்டதாகவும் பாஜகவினர் கூறியுள்ளனர்.புபேந்திர யாதவ் பாஜக கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக இருக்கிறார். பாஜக தலைவர் அமித் ஷாவை போலவே இவர் செயல்படுவார் என்று கூறப்படுகிறது. உத்திரபிரதேச தேர்தல் முடிந்த கையேடு அமித் ஷா குஜராத் தேர்தல் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது புபேந்திர யாதவை குஜராத் மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக தேர்ந்தெடுத்தார். இவர் ஏற்கனவே ராஜஸ்தான், ஜார்கண்ட், பிகார் ஆகிய மாநில தேர்தலில் பொறுப்பாளராக இருந்துள்ளார்.

Bhupender Yadav, who is the BJP National General Secretary, and election in-charge in Gujarat gave a great victory to BJP. He did a good job than the Amit Shah and Modi.

Recommended