ஃபேஸ்புக் நட்பால் விபரீதம்...டீன் ஏஜ் பெண்களை கண்காணியுங்கள் பெற்றோர்களே!- வீடியோ

  • 6 years ago
ஃபேஸ்புக் நட்பு வளரிளம் பெண்களின் வாழ்க்கையில் விளையாடியுள்ளது. இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி சூறையாடும் கும்பல் அதிகரித்து வருவதால் பெற்றோர்கள் கண்காணிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். சென்னையில் உள்ள பெரியமேடு பகுதியைச் சேர்ந்த சிறுமி, 4 ஆண்டுகளுக்கு முன் ஃபேஸ்புக்கில் மோனி என்பவருடன் நண்பராகி உள்ளார். அவ்வப்போது நேரில் சந்தித்துள்ளனர். அவர்கள் நேரில் சந்தித்த போது எடுத்த வீடியோவை வைத்து, அந்தச் சிறுமியை மிரட்டி நான்கு வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பலமுறை இதை காரணம் கட்டி அந்தச் சிறுமியிடமிருந்து பல லட்சம் ரூபாயை மிரட்டி வாங்கியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு ரவீந்தர் என்பவரும் அந்தச் சிறுமியைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அந்தச் சிறுமி கர்ப்பமாகியதால் அவர்கள் இருவரிடமும் தெரிவித்துள்ளார். கருவைக் கலைக்க 5 லட்சம் கொண்டு வரும்படி கூறியுள்ளனர். அந்தச் சிறுமி இந்தச் சம்பவம் பற்றி தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதை அறிந்த பெற்றோர் பாலியல் வன்கொடுமை செய்த இருவர் மீதும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

Social activists warn the parents to monitor their kids who are active on FB and other social media

Recommended