மாணவிகளை செல்போனில் படம் எடுத்த ஆசிரியர் ! தேர்வு அறையில் விபரீதம்- வீடியோ
  • 6 years ago
தேர்வு அறையில் மாணவிகளை செல்போனில் படம் எடுத்த தேர்வு அறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதாள் பரப்பரப்பு

தமிழம் முழவதும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற்று வருகின்றன .நேற்று கணித்தேர்வு நடைபெற்றது. தேனியில் தனியார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் ஒரு தேர்வு அறையில் மாணவிகள் தேர்வு எழுதிக்கொண்டு இருந்த போது அந்த தேர்வு அறையில் இராயப்பன்பட்டி தனியார் பள்ளியை சேர்ந்த ஜெயராஜ் என்ற ஆசிரியர் அறை கண்காணிப்பாளராக இருந்துள்ளார்

இந்நிலையில் அவர் தேர்வு எழுதிகொண்டிருந்த மாணவிகளை அவர்களுக்கு தெரியாமல் தனது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார் இதனை பார்த்த மாணவிகள் தேர்வு முடிந்ததும் பள்ளி ஆசிரியைகளிடம் பெற்றோர்களிடமும் புகார் தெரிவித்தனர். இதனால் பெற்றோர்கள் பள்ளிக்கு திரண்டு வந்தனர். தேர்வு அறையில் மாணவிகளை படம் எடுத்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர் இதனைத்தொடர்ந்து தலைமை கண்காணிப்பாளர் ஆசிரியர் ஜெயராஜை சோதனையிட்டப்போது அவரிடம் இருந்து செல்போனில் மாணவிகளின் புகைப்படம் இருந்துள்ளது பின்னர் செல்போனில் இருந்த படங்களை அழித்த தலைமை கண்காணிப்பாளர் மாணவிகளை புகைப்படம் எடுத்த ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்ததை அடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் ஆர்பாட்டத்தை விட்டு களைந்து சென்றனர்

DES : In the examination room the students took the cell phone in the examination of the chairperson of the school to take action against the superintendent
Recommended