அரசியல் களத்தில் விடிந்துள்ள கமலின் 63 -வது பிறந்தநாள்- வீடியோ

  • 7 years ago
உலக நாயகன், கலைஞானி என ரசிகர்களால் அழைக்கப்படும் கமல் ஹாஸன் 1954-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்தவர்.
தனது 5வது வயதிலேயே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான குடியரசுத் தலைவர் விருதினைப் பெற்றார்.

தொடர்ந்து பார்த்தால் பசி தீரும், பாத காணிக்கை போன்ற சிவாஜி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், எம்ஜிஆருடன் ஆனந்த ஜோதி படத்தில் நடித்தார். இன்று தனது 63வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் கமல். வழக்கமாக கமலின் பிறந்த நாள் ஒரு நாள் கொண்டாட்டம், ரத்ததானம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என முடிந்துவிடும். ஆனால் இந்த முறை பரபரப்பான அரசியல் களத்தில் விடிந்துள்ளது. இதன் தொடர்ச்சி எப்படி இருக்கும் என்பது போகப் போகத் தெரியும். பிறந்த நாள் வாழ்த்துகள், கமல் ஹாஸன்!

Kamal Haasan is celebrating his 63rd birthday today.

Recommended