#templevision #tv24 #அதியமான்கோட்டை தட்ஷணகாசி காலபைரவர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி ராஜ அலங்காரம் |

  • 2 years ago
#ஆன்மீகம் #aanmeegam #தருமபுரி அடுத்த அதியமான் கோட்டையில் எழுந்தருளியுள்ள தட்ஷணகாசி காலபைரவர் கோயிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி வெள்ளிக் கவசத்தில் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.காசிக்கு அடுத்தபடியாக காலபைரவருக்கு என தனிக்கோயில் தருமபுரி அடுத்த அதியமான்கோட்டையில் தட்க்ஷிண காசி காலபைரவர் கோயில் அமைந்துள்ளது. காசிக்கு செல்ல முடியாதவர்கள் அதியமான்கோட்டையில் உள்ள பைரவர் கோயிலில் வந்து பிரார்த்தனை செய்வது வழக்கம். தேய்ப்பிறை நாட்களில் இந்த கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மிகவும் பழமையான கோயில் என்பதால் தமிழகம் மட்டும் அல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் தேய்பிறை அஷ்டமி நாட்களில் வந்து தங்களது நேர்த்தி கடன் நிறைவேற வேண்டும் என காலபைரவருக்கு வெள்ளை பூசணிக்காயில் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று தேய்பிரை அஷடமி என்பதால் காலை முதல் பைரவருக்கு பல்வேறு யாகங்களும், 64 வகையான அபிஷேகங்களும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பைரவர் வெள்ளி கவசத்தில் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த தேய்பிறை அஷ்டமி பூஜையில் கலந்துகொள்ள தமிழகம் மட்டும் அல்லாமல் அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்திலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோயிலை 18 முறை வலம் வந்து தீபம் ஏற்றி நீண்ட வரிசையில் நின்று பைரவரின் அருளைப்பெற்று சென்றனர்.

Recommended