#Tv24 #Templevision #உலக நன்மை வேண்டி #கரூரில் மாபெரும் குத்துவிளக்கு பூஜை பசுபதி ஐயப்பன் ஆலயத்தில்

  • 2 years ago
கரூரில் உலக நன்மை வேண்டியும், கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை காக்க வேண்டி மாபெரும் குத்துவிளக்கு பூஜை – ஏராளமான பெண்கள் பங்கேற்று கடவுள் அருள் பெற்றனர்

கரூர் நகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் அருகே வீற்று அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ பசுபதி ஐயப்பன் ஆலயத்தின் முன்பு, கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கத்தின் 35 வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. 24 ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு உலக நன்மை வேண்டியும், கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்கள் விடுபெற கோரியும் மாபெரும் குத்துவிளக்கு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. மஹா சங்கல்பத்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் மஹா கணபதி ஹோம்ம், ஸ்ரீ நவக்கிரஹ ஹோமம், ஸ்ரீ மிருத்யுஞ்சய ஹோம்ம் நிகழ்ச்சியும், அஷ்டலெட்சுமி ஹோமம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கரூர் சிவாச்சாரியார் திலகம் ஸ்ரீ எம்.முரளி சிவாச்சாரியார் தலைமையில் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் குத்துவிளக்கு பூஜை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குத்துவிளக்குகளுடன் கலந்து கொண்டு தீபத்தினை ஏற்றி வழிபாடு செய்து அத்துடன் ஸ்ரீ தன்வந்திரி மஹா யாகமும் நடைபெற்றது. யாகத்தில், கலந்து கொண்டு, பெண்கள் பூஜையில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கான முழு ஏற்பாடுகளை கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Recommended