திருப்பூரில் ஐஸ்கட்டி மழை; வீட்டிற்குள் எடுத்து சென்ற மக்கள்!

  • 2 years ago
திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்ய ஆரம்பித்தது. சிறிது நேரம் கழித்து, மழையுடன் ஆலங்கட்டிகளும் விழ ஆரம்பித்தது.சற்று பெரிய அளவில் விழுந்ததால்,மழையில் நனைந்தபடி சென்ற மக்கள் வலி தாங்க முடியாமல் கட்டிடங்களுக்குள் சென்று தப்பினர். மேலும் பலர் இந்த ஐஸ்கட்டிகளை கையில் எடுத்து பார்த்து ஆச்சர்யப்பட்டு மகிழ்ந்தனர்.சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக ஆலங்கட்டியுடன் மழை பெய்து,வெப்பமான நிலை நீங்கி குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Recommended