கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்பரர் ஆலயத்தில் மகா சனிப்பிரதோஷ நிகழ்ச்சி
  • 3 years ago
கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சனிப்பிரதோஷ நிகழ்ச்சி பக்தர்களின்றியும் ஆலயம் மூடப்பட்ட நிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விஷேச அபிஷேகங்களும், விஷேச தீபாராதனைகளும் நடைபெற்றது

கொரோனா தொற்று பரவல் காரணமாக நடத்தை விதிகளை அமல்படுத்த வேண்டி, தமிழகத்தில் உள்ள இந்துசமய அறநிலையத்துறைக்குட்பட்ட அனைத்து ஆலயங்களும், தனியார் ஆலயங்களும் கடந்த சில வாரங்களாகவே வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்களும் ஆலயங்கள் விடுமுறை என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பினையடுத்து இன்று சனிக்கிழமை என்பதினால் கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் பூட்டப்பட்டிருந்தது. இருப்பினும் ஆலயத்திற்குள் நட்த்தப்படும் அனைத்து பூஜைகளும் நடத்தப்படுவது வழக்கமான நிலையில், இன்று மகா சனிப்பிரதோஷ நிகழ்ச்சி பக்தர்களின்றியும், ஆலயம் மூடப்பட்ட நிலையிலும் நடத்தப்பட்டது. அருள்மிகு ஸ்ரீ அலங்காரவள்ளி, அருள்மிகு ஸ்ரீ செளந்தரநாயகி உடனுறையாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரருக்கு முன்பு வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ நந்தி எம்பெருமானுக்கு விசேஷ அபிஷேகங்கள்,. பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு நடத்தப்பட்டது. பின்னர் நடைபெற்ற சிறப்பு பூஜையினை தொடர்ந்து கோபுர ஆரத்தி, கற்பூர ஆரத்தி, நாக ஆரத்தி, நட்சத்திர ஆரத்திகள் என்று அனைத்து வித ஆரத்திகளும் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற மகா தீபாராதனையில் நந்தி எம்பெருமான் ஈஸ்வரனை வணங்கி மகிழ்ந்தார். இதற்கான முழு ஏற்பாடுகளை ஆலய நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையினரும் சிறப்பாக செய்திருந்தனர்.
Recommended