#BOOMINEWS |விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் |
  • 3 years ago
கோவை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் கோவிலுக்க் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

இன்று விநாயகர் சதுர்த்தி விழா இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் வீடுகளில் சிலை வைத்து வழிபட அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கோவில்களில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் பலர் விதிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆசியாவிலேயே மிக உயரமான பிள்ளையார் சிலை உள்ள கோவிலான புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்பதால் வெளியில் நின்றவாரே சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நீண்ட நேரம் நின்று வழிபட அனுமதி இல்லை. இதே போன்று கோவையில் பல்வேறு இடங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவையில் பிரசித்தி பெற்ற கோவில்கள் அனைத்திலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கோவில் திறக்கப்பட்டிருந்தால் மிகவும் நன்றாக இருக்குமென பக்தர்கள் தெரிவித்தனர். இருப்பினும் கோவிட் காலத்தில் வெளியில் நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளதென பலரும் தெரிவித்தனர்.
Recommended