துரைமுருகன் கட்சி தலைமையை பற்றி பேசியதை சொன்னால் அசிங்கமாகிவிடும்.. சுதீஷ் ஆவேசம்-வீடியோ

  • 5 years ago
தேமுதிக நிர்வாகிகள் சிலர் சந்தித்ததை அரசியலாக்கிய துரைமுருகன் அவரது கட்சித் தலைமை பற்றி தன்னிடம் கூறிய விஷயங்களை வெளியே சொன்னால் அசிங்கமாகி விடும் என சுதீஷ் ஆவேசத்துடன் கூறினார். தேமுதிக தலைமையகத்தில் அக்கட்சியின் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குழு தலைவர் சுதீஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது துரைமுருகனை தனது கட்சி நிர்வாகிகள் சந்தித்ததில் கட்சிஇ அரசியல் தொடர்பாக எதுவும் இல்லை என்றார். ஆனால் துரைமுருகனுடன் 10 நாட்களுக்கு முன்னர் கூட்டணி தொடர்பாக பேசியது உண்மைதான் என்றும் நேற்று பேசவில்லை என்று தெரிவித்தார்.துரைமுருகனுடன் என்ன பேசப்பட்டது என்பதை தெரிவிப்பது அரசியல் நாகரிகமில்லை என அவர் குறிப்பிட்டார். ஆனால் தேமுதிகவினர் கூட்டணிப் பேச்சுக்காக சந்தித்தனர் என துரைமுருகன் கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டபோது துரைமுருகன் அவரது கட்சி பற்றியும்இ கட்சித் தலைமை பற்றியும் தன்னிடம் கூறியதை தான் வெளியில் சொன்னால் அசிங்கமாகிவிடும் என ஆவேசப்பட்டார்.
மேலும் முதலில் தங்களுடன் பாஜகதான் கூட்டணிப் பேச்சு நடத்தியது என்றும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிமுக தலைமையில் கூட்டணி என்பதால் அக்கட்சியுடன் பேச்சை தொடங்க தாமதமாகி விட்டது என்றும் சுதீஷ் விளக்கமளித்தார்

des : Speaking about the leadership of the Duraimurugan Party, Sudheesh is a ugly one

Recommended