ஆண்டிபட்டி பகுதியில் தங்கச்தமிழ்செல்வன் உண்ணாவிரதம்-வீடியோ

  • 6 years ago
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் தங்கச்தமிழ்செல்வன் உள்ளிட்ட அ.ம.மு.க.வினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஆண்டிபட்டி தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை எனவும், இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அ.ம.மு.க. சார்பில் உண்ணாவிரதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.போலீசார் அனுமதி மறுத்த நிலையில், நீதிமன்ற உத்தரவு பெற்று, திட்டமிட்டபடி இன்று ஆண்டிபட்டி வைகை அணை சாலையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. இதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ.க்களான தங்கதமிழ்ச்செல்வன், கதிர்காமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Des: DMK activists involved in hunger strike in Andipatti area in Theni district

Recommended