புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலய நவராத்திரி கலை விழா- வீடியோ

  • 6 years ago
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு ஆன்மீக தளங்கள் இருந்தாலும் புகழ் பெற்றதும் நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்யும் ஆன்மீக தளம் புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம். இவ்வாலயத்தில்ஆண்டு தோறும் பல திருவிழாக்கள் நடைபெற்றாலும் நவராத்திரி கொலு கலை விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும் இவ்வாண்டும் நவராத்திரி கலை விழா தஞ்சை காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் து கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை தாங்கினார் கொலு காட்சியினை கோவில் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே துவக்கி வைத்தார் முன்னதாக மங்கள இசையினை புன்னைநல்லூர் மகாதேவன் குழுவினரும் பாவுப் பிள்ளை பரத நாட்டியப் பள்ளி மாணவிகள் நிகழ்த்தினார்கள் 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி கலை விழாவில் ஒவ்வொரு நாளும் மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. நவராத்திரி கலை விழாவைக் காண நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து கலை விழாவை கண்டு அம்மன் அருளைப் பெற்று செல்வார்கள் நிகழ்ச்சிகளை விழாக்குழு செயலாளர் முருகு, வீரமணி ஏற்பாடு செய்திருந்தார்.

Des: Thanjavur district is famous for its various spiritual sites, but it is also a popular site where thousands of pilgrims from all over the world visit the Punnainallur Mariamman Temple. The Navarathri Kolu Art Festival is the most famous of all the festivals of the year

Recommended