பாதுகாப்பு இல்லாத தாமிரபரணி புஷ்கர விழா

  • 6 years ago
தாமிரபரணி புஷ்கர விழா நடக்க உள்ள நிலையில் பக்தர்கள் வசதிக்காக இதுவரை எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அரசு செய்து கொடுக்கவில்லை என தாமிரபரணி புஷ்கர குழு தலைவர் மற்றும் அகில இந்திய துறவிகள் சங்க தலைவர் ரமாணந்தசுவாமி தெரிவித்துள்ளார். நெல்லை தாமிரபரணியை வணங்கும் வகையில் நாளை 11-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை தாமிரபரணி புஷ்கர விழா நடைபெறுகிறது. 144 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் இந்த விழாவையொட்டி பாபாநசம் முதல் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை 64 தீர்த்தக்கட்டம் மற்றும் 149 படித்துறைகளில் ஆரத்தி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் புஷ்கர விழாவிற்காக இதுவரை பக்தர்களுக்கு தேவையான எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தாமிரபரணி புஷ்கர குழு தலைவர் மற்றும் அகில இந்திய துறவிகள் சங்க தலைவர் ரமாணந்தசுவாமி அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்துள்ளார்.

Des: Thamiraparani Pushkara Group Chairman and All India Monks Association Chairman Ramanandaswamy said the government has not provided any basic facilities for the convenience of the Tamaraparani Pushkar festival.

Recommended