ரயில்கள் தாமதம் ! பயணிகள் போராட்டம்- வீடியோ
  • 6 years ago
ரயில் தினமும் தாமதமாக வரவுவதாக கூறி பயணிகள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் திருப்பூர் மட்டுமின்றி கோவை ஈரோடு உள்ளிட்ட அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தினசரி ரயிலில் திருப்பூருக்கு வந்து செல்கின்றனர் இந்நிலையில் கடந்த சில நாட்களாக திருப்பூர் ரயில் நிலையத்திற்கு 7 மணிக்கு வரவேண்டிய ரயில் சுமார் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம்வரை தாமதமாக வந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்றும் வழக்கம்போல 7 மணிக்கு வரவேண்டிய ரயில் 9.30 மணிக்கு வரும் என அறிவிக்கப்பட்டது இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், ரயில்வே தண்டவாளத்தில் இறங்கி திடீர் பேராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது சுமார் 30 முப்பது நிமிடம் இந்த போராட்டம் நீடித்தது இதனை அடுத்து சுமார் 8. 20 மணி அளவில் முதல் தண்டவாள பகுதியில் மயிலாடுதுறையில் இருந்து கோவை நோக்கி சென்ற ரயிலை மறித்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டது உடனடியாக ரயில்வே நிர்வாகம் மயிலாடுதுறையில் இருந்து கோவை நோக்கி சென்ற ரயிலை ஒருநாள் மட்டும் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்வதற்கு அனுமதிஅளித்தது இதனை அடுத்து பயணிகள் அனைவரையும் அந்த ரயிலில் அனுப்பிவைக்கப்பட்டது.

Des: The transit was carried out by the passengers on the railway track, claiming that the train was delayed everyday.
Recommended