ஒரு ரயிலால் பல ரயில்கள் தாமதம் பயணிகள் அவதி- வீடியோ
  • 6 years ago
திண்டிவனத்தில் திருச்செந்தூர் ரயில் பழுதாகி நின்றதால் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படவேண்டிய கன்னியாகுமரி ராமேசுவரம், விழுப்புரம் ,பாண்டிச்சேரி ரயில்களும் ஒரு மணி நேரத்துக்கு மேல் தாமதமாக சென்றன

சென்னை எழும்பூரில் இருந்து தினமும் மாலை 4.05 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர் செல்லும் செந்தூர் விரைவு ரயில் திங்கள்கிழமை சற்று தாமதமாகப் புறப்பட்டது. இந்த ரயில் மாலை 6.30அளவில் மேல்மருவத்தூரைக் கடந்து திண்டிவனம் அருகே வந்தபோது என்ஜினில் பழுது ஏற்பட்டது. இதனால் திண்டிவனம் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. என்ஜின் பழுது குறித்து ரயில் ஓட்டுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தார். இதையடுத்து விழுப்புரத்தில் இருந்து மாற்று என்ஜின் கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்டது. இதையடுத்து ரயில் அங்கிருந்து சுமார் இரவு 8.30மணி அளவில் புறப்பட்டுச் சென்றது.

3 மணி நேரம் காலதாமதமாக ரயில் வந்ததால் விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் காத்திருந்த பயணிகள் அவதியடைந்தனர். திருச்செந்தூர் ரயில் பழுதாகி நின்றதால் அடுத்த சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் கன்னியாகுமரி ராமேசுவரம் ஆகிய ரயில்களும் ஒரு மணி நேரத்துக்கு மேல் தாமதமாக வந்தன.

DES : The Tirunelveli train will be diverted from Chennai Egmore to Kanyakumari Rameswaram, Villupuram and Pondicherry.
Recommended