கொச்சி விமான நிலையம் 15 நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது

  • 6 years ago
கேரளாவில் பெய்த வரலாறு கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பல்வேறு 370-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கொச்சி விமான நிலையத்திலும் வெள்ள நீர் சூழ்ந்ததால், விமான ஓடு பாதை, விமான நிலையத்தில் உள்ள கடைகள், டாக்ஸிகள் நிறுத்துமிடம் போன்றவையும் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக, 15 நாட்களாக கொச்சி விமான நிலையம் மூடப்பட்டிருந்தது. இதனால் 220 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது .கொச்சின் வந்த விமானங்களும் திருவனந்தபுரம், கோழிக்கோடு மற்றும் கோயமுத்தூர் போன்ற வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து, சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததைத்அடுத்து, 15 நாட்களாக மூடப்பட்டிருந்த கொச்சி விமான நிலையம், இன்று திறக்கப்பட்டது.

Recommended