திமுக-வின் பொதுக்குழு கூட்டம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி கூட உள்ளதாக தகவல்

  • 6 years ago
திமுக-வின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வீட்டில், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனையில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டுவது குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.

Recommended