ராமநாதபுரம் குந்துகால் மீனவ கிராமத்தில் 70 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மீன்பிடி இறங்குதளம் - மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
  • 6 years ago
இராமநாதபுரம் மாவட்டத்தில், ஆழ்கடல் மீன்பிடிப்பினை ஊக்குவித்திடும் வகையில் குந்துகால் மீனவ கிராமப்பகுதியில் 70 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக மீன்பிடி இறங்குதளம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இம்மீன்பிடி இறங்கு தளமானது சுமார் 300 விசைப்படகுகளை நிறுத்திட ஏதுவாகவும், மீன்களை சேமித்து வைக்க 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன சேமிப்பு கிடங்கு வசதிகள் என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது. இந்நிலையில், இறங்குதளத்திற்கான கட்டுமானப்பணிகளை ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
Recommended