வாகனங்கள் வேலை நிறுத்தம் பொதுமக்கள் அவதி- வீடியோ

  • 6 years ago
வாகனங்கள் வேலை நிறுத்தம் பொதுமக்கள் அவதி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனம் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், டோல்கேட் வசூல் கைவிட வேண்டும், இன்சூரன்ஸ் என்ற பெயரில் கொள்ளை அடிப்பதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் சார்பில் இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்யப்படும் என அறிவித்திருந்தனர். அதன்படி இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனால் ஆட்டோக்கள் பள்ளி வாகனங்கள் பேருந்துகள் இயக்கப்பட வில்லை. ஒரு சில மாவட்ட தலைநகரங்களில் வாகனங்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

Des : The Public Transport Federation of Workers (SLMC) today insisted on a number of demands, and the public was suffering from the strike.

Recommended