தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்- வீடியோ
  • 6 years ago
நிலத்தடி நீரை எடுக்ககூடாது என்ற நீதிமன்ற உத்தரவை நீக்க கோரி தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்

வணிக நோக்கில்நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி எடுப்பதை தடுக்கவும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என நீதிமன்றம் தீர்பளித்தது. இந்நிலையில் அம்பத்தூரில் உள்ள டன்லப் மைதானத்தில் சென்னை- காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து நிலத்தடி நீரை எடுக்ககூடாது என்ற நீதிமன்ற உத்தரவை நீக்க கோரியும், தண்ணீரை கனிமவள பிரிவில் இருந்து நீக்க கோரியும் காலவரையற்ற வேலைநிறுத்ததில் ஈடுப்பட்டனர். அப்பொழுது கூறிய அவர்கள் நிலத்தடி நீரை எடுத்த இல்லாத மக்களுக்கு கொடுத்து வருவதாகவும், ஆனால் எங்களை காவல்துறையும்,வருவாய்துறையும் அச்சுகிறது என்றும் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அரசு நிரந்தர தீர்வு வழங்கும் வரை இந்த காலவரையற்ற போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தனர். முழுவதும் நடைப்பெறும் இந்த அறவழி போரட்டத்தில் சென்னை-காஞ்சிபுரம்- திருவள்ளூர் தண்ணீர் லாரி சங்கத்தின் தலைவர் நிஜலிங்கம் தலைமையில் நடைப்பெறும் இந்த போராட்டத்தில் பாஸ்கரன்,இரமேஷ்,ஜான்,சதிஷ்குமார் உள்ளீட்ட ஏராளமானோரும் கலந்து கொண்டனர் இதில் மூன்று மாவட்டத்தையும் சேர்த்து 4500 லாரிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Des: Water truck owners demanded the removal of the court order not to take groundwater
Recommended