சிலை கடத்தலில் சிக்கிய ஆணையர்- வீடியோ
  • 6 years ago
நவபாஷானசிலை வடிவமைத்ததில் முறைகேடு செய்தது குறித்து முன்னாள் அறநிலையத்துறை ஆணையரிடம் சிலைகடத்தல் தடுப்புபிரிவினர் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நவபாஷாணசிலை சேதமடைந்தாககூறி தங்கத்தால் ஆன புதிய திருமேனி கடந்த 2004ல் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்தபதி முத்தையா என்பவரால் வடிவமைக்கப்பட்டதில் பழுது இருந்ததால் சிலமாதங்களில் அகற்றப்பட்டது. மேலும் இச்சிலையை வடிவமைத்ததில் 42 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டிருப்பதாக தொடரப்பட்ட வழக்கை சிலை கடத்தல் தடுப்புபிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரித்துவருகின்றனர். அப்போது சிலை வடிவமைத்ததில் 1.31 கோடி மோசடி செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தையடுத்து முத்தையா மற்றும் பழனிகோவில் செயல் அலுவலராக பணிபுரிந்தவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் முன்னாள் அறநிலையத்துறை ஆணையர் தனபாலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனால் கைதுக்கு பயந்து தலைமறைவாகியிருந்த ஆணையர் தனபால் உயர்நீதிமன்ற கிளையில் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தார். அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் அறிவுறுத்தியது.

இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணைக்காக கும்பகோணத்திலிருந்து முன்னாள் அறநிலையத்துறை ஆணையர் தனபால் போலீசாரால் அழைத்துவரப்பட்டு, பின்னர் திருச்சியில் உள்ள சிலைகடத்தல் தடுப்புபிரிவு அலுவலக்தில் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார். ஏடிஎஸ்பி ராஜாராம் முன்னிலையில் தனபாலிடம் சிலை செய்ததில் மோசடி குறித்தும், இதுபோன்று பல்வேறு கோவில்களில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்றும் பல்வேறு கேள்விகள் கேட்கபட்டதுடன் தொர்ந்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Des : The scandalous detainee has been conducting an inquiry into the irregularities in the formation of Navapashanasil.
Recommended