ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கிய தேர்தல் ஆணையர் ஜோதி!- வீடியோ

  • 6 years ago
பிரதமர் மோடிக்கான விசுவாசத்தை ரொம்பவே அதிகமாக குஜராத் தேர்தலில் காட்டிவிட்டார் தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி. ஆனால் ஜோதியின் இந்த நடவடிக்கையால் இந்திய ஜனநாயகத்துக்கு பெரும் அவமானத்தைத்தான் தேடி தந்திருக்கிறது. குஜராத் மாநிலத்தில் மோடி முதல்வராக இருந்த போது தலைமைச் செயலராக பதவி வகித்தவர்தான் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி. இதனால்தான் குஜராத் சட்டசபைக்கான தேர்தலை உரிய நேரத்தில் அறிவிக்காமல் இழுத்தடிப்பு செய்தார் ஜோதி.

இது பெரும் சர்ச்சையாகிப் போனது. ஆனால் மத்திய அரசோ இந்த சைக்கிள் கேப்பில் குஜராத் வாக்காளர்களை திருப்திபடுத்துகிறவகையில் திட்டங்களை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் குஜராத்தில் தேர்தல் ஆணையம் முழுவதும் பாஜகவுக்கு சார்பாக அப்பட்டமாக நடந்து கொண்டது.

பாஜக தலைவர்கள் வீட்டிலேயே பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்கள், வாக்காளர்களுக்கு தருவதற்காக கடத்தி கொண்டுவரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் ஆணையமோ கண்டுகொள்ளவே இல்லை. முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு முன்புதான் தேர்தல் அறிக்கையையே பாஜக வெளியிட்டது.


Political Activists slammed that the Election Commission of India's stand on the Gujarat Assembly elections.

Recommended