தமிழகத்திற்கு கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து, 39 ஆயிரம் கன அடியாக நீர் திறப்பு அதிகரிப்பு
  • 6 years ago
தென்மேற்கு பருவமழை கடந்தமாதம் தொடங்கியதையடுத்து தமிழகம், கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதையடுத்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை, படிப்படியாக குறைய தொடங்கியதால், கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. இதனை தொடர்ந்து கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அவ்வபோது, அதிகரிக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில், காவிரி் நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, ஹசன் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தற்போது கபினி அணையின் முழுகொள்ளளவான 82 அடியை எட்டியுள்ளது. இதனால், அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு 25 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென 35 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 4 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV
Recommended