தமிழக அரசை குற்றம்சாட்டும் திருநாவுக்கரசர்- வீடியோ

  • 6 years ago
ஜனநாயகத்தையும் பத்திரிக்கை மற்றும் ஊடக சுதந்திரத்தின் குரல்வலையை நெரிக்கும் அரசாக தமிழக அரசு உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுகரசர் குற்றம்சாட்டியுள்ளார்

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது நடந்த கோத்ரா சம்பவத்தில் பல இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது மோடியை முதலமைச்சர் பதவியில் இருந்து விலக்கிவிடலாம் என அப்போதைய பிரதமர் வாஜ்பாய் எண்ணிய போது,மோடிக்கு ஜாமீன் அளித்தவர் அத்வானி.ஆனால் இன்று அத்வானிக்கே ஜாமீன் அளித்து வெளியேற்றிவிட்டார் மோடி என்றார் . மேலும் பத்திரிக்கையாளர்கள்,தொலைக்காட்சிஊடகவியலாளர்கள்,அரசியல்வாதிகள்மற்றும் அரசியல் விமர்சகர்கள் இன்று அரசிற்கு எதிராக வீட்டில் இருந்தவாறு கருத்து கூறினாலும் அவர்கள்மீது வழக்குபோடும் அரசாக தமிழக அரசு உள்ளது என்றும்ஜனநாயகத்தையும்,பத்திரிக்கை மற்றும் ஊடக சுதந்திரத்தையும் குரல்வலையை நெரிக்கும் அரசாக தமிழக அரசு உள்ளது கண்டனத்திற்குரியது என்றார்.

Des: Congress Party state leader Thirunavakarar has accused the Tamil Nadu government of democracy and press freedom of media freedom.

Recommended