பிக் பாஸ் பிரபலம் புற்று நோயால் அவதி!

  • 6 years ago
Ex-Bigg Boss contestant, KRK has reportedly been diagnosed with stage 3 stomach cancer! A press release of KRK about his health has been shared through a verified Twitter handle by the name of KRKBOXOFFICE.

பாலிவுட் நடிகரும், விமர்சகருமான கமால் ஆர் கான் தனக்கு புற்றுநோய் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகரும், விமர்சகரும், தயாரிப்பாளருமான கேஆர்கே என்கிற கமால் ஆர் கான் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதற்கு பெயர் போனவர். பாலிவுட் பிரபலங்களை சமூக வலைதளங்களில் வம்பிழுத்துக் கொண்டிருப்பார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
பாலிவுட்டின் நம்பர் ஒன் விமர்சகர் நான் தான் என்று சொல்பவர். இந்நிலையில் அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ள விஷயம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
எனக்கு வயிற்றில் புற்று நோய் அதுவும் 3வது ஸ்டேஜில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் நான் இன்னும் 1-2 ஆண்டுகள் தான் வாழ்வேன் என்று கேஆர்கே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
எனக்கு யாருடைய பரிதாபமும் தேவையில்லை. நான் சீக்கிரம் இறக்கப் போகிறேன் என்பதை உணர்த்தும் யாருடைய போன் காலையும் எடுக்க மாட்டேன். முன்பு போன்றே என்னை வெறுக்கும், விரும்பும் மக்களை பாராட்டுவேன் என்கிறார் கேஆர்கே.
என் இரண்டு ஆசைகளை நிறைவேற்ற முடியாமல் போய்விடுமே என்ற கவலை தான் எனக்கு. ஏ கிரேட் படத்தை தயாரிக்க வேண்டும், அமிதாப் பச்சன்ஜியுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் இல்லை அவரை வைத்து தயாரிக்க வேண்டும். இந்த இரண்டு ஆசைகளும் என்னுடன் இறந்து போகும் என்று வருத்தப்பட்டுள்ளார் கேஆர்கே.
இனி இருக்கும் நேரத்தை என் குடும்பத்தாருடன் செலவிட விரும்புகிறேன். நீங்கள் என்னை வெறுத்தாலும் சரி, விரும்பினாலும் சரி நான் உங்கள் அனைவரையும் விரும்புகிறேன் என்று கேஆர்கே தெரிவித்துள்ளார்.

Recommended