விஜய் பாட்டுக்கு செம ஆட்டம் போட்ட தினேஷ் கார்த்திக்- வீடியோ
  • 6 years ago
அப்படிப்போடு பாடலுக்கு தினேஷ் கார்த்திக் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகியுள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். பாம்புகளின் கொட்டத்தை தினேஷ் கார்த்திக் அடக்கிவிட்டார் என்று இந்திய ரசிகர்கள் அவரை கொண்டாடுகிறார்கள். கில்லி படத்தில் விஜய், த்ரிஷா செம ஆட்டம் போட்ட அப்படிப்போடு போடு பாடலுக்கு தினேஷ் கார்த்திக் மரண குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. தினேஷ் கார்த்திக் அப்படிப்போடு பாடலுக்கு ஆடியதை பார்த்த விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள். தினேஷ் கார்த்திக்கின் சாதனையை பாராட்டி அமுல் நிறுவனம் அவரை வைத்து கார்டூன் போட்டுள்ளது. அமுல் கார்டூனில் வர வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறிவிட்டதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். பாம்பாட்டம் போட்ட வங்கதேச கிரிக்கெட் வீரர்களை அடக்கிய தமிழன்டா தினேஷ் கார்த்திக் என தமிழர்கள் அவரை கொண்டாடுகிறார்கள்.

Cricketer Dinesh Karthik danced for Vijay's Appadi podu song once and that video has gone viral on social media now.

Recommended