கார்த்தி சிதம்பரம் கைதின் பின்னணியில் இருக்கும் பாலிடிக்ஸ்- வீடியோ
  • 6 years ago
கார்த்தி சிதம்பரத்தை ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திடீரென சிபிஐ கைது செய்தது ஏன் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் சட்டவிரோதமாக அந்திய முதலீடு செய்ய கார்த்தி சிதம்பரம் உதவியதாக எழுந்த புகாரில் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் வெளிநாடு சென்று, இன்று சென்னைக்கு திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை திடீரென சிபிஐ கைது செய்துள்ளது.

வெளிநாடு சென்றால் திரும்பி வரமாட்டார் என்பதால் அவருக்கு அனுமதி வழங்க கூடாது என்று சிபிஐ கூறிய வாதத்தை புறம்தள்ளிய நீதிமன்றம், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியது. அவரும், இந்தியாவுக்கு திரும்பினார். இந்த நிலையிலும், அவர் கைது செய்யப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

CBI has arrested Karti Chidambaram in relation to the INX Media case for non-cooperation. As centre is fire fighting the bank loan scandals, the arrest of Karthi looks like a diversionary tactics? It looks like cbi is yet to collect any solid evidence against him, but arrested him.
Recommended