பெங்களூரு சிறையில் சசியை சந்தித்த தினகரன்...ஜெயா டீவியை கைப்பற்ற திட்டமா?- வீடியோ

  • 6 years ago
சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி தினகரன் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சந்தித்து பேசினார். ஜெயாடிவி, சொத்துக்கள் அனைத்தும் டிடிவி தினகரன் வசமாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆர்கே நகர் இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்த டிடிவி தினகரன், 45 நிமிடங்கள் மட்டுமே சந்தித்து பேசியதாக தெரிவித்திருந்தார். சிறையில் சசிகலா மவுன விரதம் இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார் தினகரன். இன்றைக்கு மிகப்பெரிய பஞ்சாயத்து சிறையில் நடந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயாடிவியை ஆரம்பத்தில் இருந்தே டிடிவி தினகரன் மனைவி அனுராதாவும், அவரது தங்கை பிரபாவும்தான் கவனித்து வந்தனர். தற்போது இளவரசி மகன் விவேக் நிர்வாகத்தின் ஜெயா டிவி வந்துள்ளது. சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பும் விவேக்கிடம் உள்ளதால் தினகரன், திவாகரன், விவேக் இடையே பனிப்போர் நிலவுகிறது.

இந்த சூழ்நிலையில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றுள்ளார் தினகரன். அவருக்கு ஆதரவாக 18 எம்எல்ஏக்கள் உள்ளனர். சொத்துக்களையும், ஜெயாடிவி, நமது எம்ஜிஆர் நாளிதழையும் டிடிவி தினகரன் தனது வசமாக்க முயற்சி செய்து வருகிறாராம்.

TTV Dinakaran today Bengaluru’s Prappana Agrahara Central Jail to visit his aunt V K Sasikala.

Recommended