அமெரிக்காவில் வளைகுடா தமிழர்கள் பொங்கல் கொண்டாட்டம்- வீடியோ
  • 6 years ago
அமெரிக்காவில் வளைகுடா தமிழ் மன்றம் சார்பாக பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஆண்டு தோறும் தை ஒன்றாம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
புதுப்பானையில் பச்சரிசி பொங்கலிட்டு கறும்பு உள்ளிட்டவற்றுடன் கதிரவனை வழிபடும் பொங்கல் பண்டிகை தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் சான்பிரான்ஸிஸ்கோ வளைகுடா தமிழ் மன்றம் சார்பில் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள எலிசபெத் ஏரி பகுதியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் அமெரிக்க வாழ் தமிழர்கள் பாரம்பரிய உடையணிந்து பொங்கல் விழாவை கொண்டாடினர். பெண்கள் கேஸ் அடுப்பில் வெட்டவெளியில் பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.

Pongal festival celebrates in California Bay Area Tamil Mandram (BATM) California. (near San Francisco) had arranged Pongal celebration at open place. Many Tamils were participated and enjoyed Pongal as if they are in own place in Tamil Nadu
Recommended